காலாவதியான நூடுல்சை தின்ற 7 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழப்பு: புதுச்சேரி அருகே பரிதாபம்

வானூர்: காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகளை தின்ற 7 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா மொரட்டாண்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகள் அருகில் உள்ள முந்திரிக் காட்டிற்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படும். நேற்று மேய்ச்சலுக்கு சென்ற 3 மாடுகள் இறந்து கிடந்தன. மாட்டின் உரிமையாளர்கள் சென்று பார்த்தபோது, அந்த பகுதியில் கிடந்த காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகளை மாடுகள் தின்றதால் உயிரிழந்தது தெரியவந்தது.

Advertising
Advertising

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 மாடுகள் இந்த பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தது. அப்போது அதற்கான காரணம் தெரியாமல் இருந்து. தற்போது 3 மாடுகள் இறந்த சம்பவத்திற்கு பிறகு தான் ஏற்கனவே இறந்த 4 மாடுகளும் காலாவதி நூடூல்ஸ் பாக்கெட்டுகளை தின்று இறந்த விஷயம் தெரியவந்தது.

முந்திரிக்காட்டில் கொட்டப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட்டுகள் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. அவற்றை இந்த பகுதியில் கொட்டிச் சென்றவர்கள் யார் என தெரியவில்லை. அவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள விவசாயிகள், உயிரிழந்த மாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: