நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தொடங்குவது குறித்து நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாகப்பட்டினம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளை தொடங்குவது குறித்து நான்கு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் செயலாளர் அரவிந்த் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதில் கவனம் செலுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டத்தால், சாலைகள் சீரமைக்கப்படாமல் பொதுமக்கள் மிகுந்த சீரமத்திற்கு ஆளாவதாக  தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் சாலைப்பணியை தொடங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு  வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories: