×

பொருளாதார தடை விவகாரத்தில் அமெரிக்காவை இந்தியா ஆதரிக்கக் கூடாது: ஈரான் எச்சரிக்கை

ஈரான்: பொருளாதார தடை விவகாரத்தில் அமெரிக்காவை இந்தியா ஆதரிக்கக் கூடாது என ஈரான் அறிவுறுத்தியுள்ளது. வெளியுறவு செய்தி தொடர்பாளர்கள் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி பங்கேற்றுள்ளார். அப்போது ஈரான் தூதர் அலி செகேனி கூறியதாவது, தங்கள் நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதை இந்தியா முற்றிலும் நிறுத்தி விட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாகக் கூறினார்.

எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொள்வதை தேச நலன் முடிவு என்று இந்தியா கூறிக் கொள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கும் பட்சத்தில் அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து தான் இந்தியாவிடம் ஏதாவது வாங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறு நடக்கவில்லை என்றால் எப்படி இந்தியாவிடம் இருந்து பொருட்கள் வாங்க முடியும் என்றும் அலி செகேனி கூறினார்.

அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்த போதிலும் சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடுகள் தொடர்ந்து வர்த்தகம் செய்வதாகவும், அந்த நாடுகளைப் போல் இந்தியாவும் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். நிலைமை இப்படியே தொடரும் பட்சத்தில் சபாஹர் துறைமுகத் திட்டம் மற்றும் வர்த்தகத்தில் இரு நாடுகள் இடையேயான உறவு பாதிக்கப்படும் என்றும் அலி செகேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : India ,US ,Iran , Sanctions, affairs, US, India, support, Iran, warning
× RELATED ஈரானில் உள்ள 600 இந்தியர்களை மீட்டு வர...