ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறி இயக்கப்பட்ட பரிசல் கவிழ்ந்து விபத்து: பிரான்ஸ் நாட்டு பெண் மாயம்

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறி இயக்கப்பட்ட பரிசல் கவிழ்ந்து நடந்த விபத்தில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த பெண்  ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 6 நாட்களாக அதிக நீர்வரத்தின் காரணமாக தொடர்ந்து 6 நாட்களாக பரிசலிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வந்தது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த 4 பேர் ஒகேனக்கல் வந்துள்ளனர். ஒகேனக்கல் வந்த அந்த குடும்பத்தினர், அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, பரிசல் சவாரி செய்ய வேண்டும் என்று ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரிடம் தெரிவித்தனர்.

Advertising
Advertising

உடனடியாக மனோகரன் அவர்களை அழைத்து சென்று ஆலம்படி அருகே உள்ள பகுதியில் இருந்து பரிசலில் அழைத்து செல்கின்றனர். அப்போது திடீரென பரிசல் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஆற்றில் பரிசல் கவிழ்ந்த விபத்தில் உடனடியாக அதில் பயணம் செய்த 4 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை காப்பாற்றி கரைக்கு கொண்டுவரப்பட்டனர். மேலும் பிரான்ஸ் நாட்டை  சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்க முடியவில்லை. உடனடியாக அவருடைய குடும்பத்தினர் ஒகேனக்கல் காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீசார், பரிசல் ஓட்டுபவர்கள் உதவியுடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories: