கொலிஜியத்தின் முடிவை தலைமை நீதிபதி தஹில் ரமாணி மதிக்க வேண்டும்: இந்திய பார் கவுன்சில்

புதுடெல்லி: கொலிஜியத்தின் முடிவை தலைமை நீதிபதி தஹில் ரமாணி மதிக்க வேண்டும்  என இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. ராஜினாமா கடிதம் அளித்தது கொலிஜியத்தின் முடிவை அவமதிக்கும் செயலாகும் என கூறியுள்ளது. தஹில் ரமாணி இடமாற்றத்திற்கும் குஜராத் பில்கிஸ் வழக்கிற்கும் தொடர்புபடுத்தி பரப்பப்படும் தகவல் தவறு என தெரிவித்துள்ளது. மேலும் மும்பை, சென்னை உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றியதுபோது ஏற்றது போல் மேகாலயாவுக்கு மாற்றியதையும் ஏற்க வேண்டும் என கூறியுள்ளது. தஹில் ரமாணி மற்றும் அஜய்குமார் மிட்டல் இடமாறுதல் குறித்த முடிவுக்கு விரைந்து ஒப்புதல் பெற நடவடிக்கை தேவை என கூறியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: