நாட்டிலேயே முதல்முறையாக தனியார் இயக்கும் தேஜஸ் ரயில் சேவை தொடக்கம்

டெல்லி: நாட்டிலேயே முதல்முறையாக தனியார் இயக்கும் தேஜஸ் ரயில் சேவை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில் பல்வேறு சிறப்பு வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்துள்ளது. டெல்லி மற்றும் உத்தரபிரதேச தலைநகரான லக்னோ இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயிலில் விமானங்களில் உள்ளது போல உபசரிப்பு பெண்கள் பயணிகளுக்கு உதவி செய்வார்கள் அதேபோல் வீடுகளில் இருந்து உடமைகளை எடுத்து வருவதற்கும், கொண்டு செல்வதற்குமான வாகனகள், தங்கும் விடுதி, விமான டிக்கெட் உள்ளிட்டவற்றை ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் தேஜஸ் ரயில் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கேட்டரிங் சேவை மற்றும் ரயில் நிலையங்களில் உடமைகளை பாதுகாக்க சிறப்பு மையம் உள்ளிட்டவை உயர்வகுப்பில் பயணம் செய்வோர்க்கு வழங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது. இந்த சேவைகளை பெறுவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தாலும் பயணத்திற்கான மொத்த செலவை கண்டிப்பாக குறைக்கும் என கூறப்படுகிறது.  தேஜஸ் ரயிலின் பயணக்கட்டணம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இருப்பினும் விமானக் கட்டணத்தை விட குறைவாகவே நிர்ணயிக்க ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்னர் ராஜதானி மற்றும் சகாப்தி போன்ற ரயில்களில் இந்த மாறுதல்குட்பட்ட கட்டண முறை செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனியார் உதவியுடன் நாட்டில் ரயில் பயணத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ரயில்வே ரயிலில் பயணிகளை உற்சாகப்படுத்த பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.  தேஜஸ் விரைவு ரயிலை இயக்கவுள்ள தனியார் நிறுவனம் ஏலச்சீட்டு செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படும் இந்த ரயில் சேவையை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியானார் கொடி அசைத்தது தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: