சமூக வலைத்தளங்களில் மாணவியர், ஆசிரியர்களின் புகைப்படங்களை பதிவேற்ற தடை விதிக்கவில்லை: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சென்னை: மாணவியர், ஆசிரியர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளி நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் மாணவியர், ஆசிரியை சார்ந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட தடை ஏதும் இல்லை என தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை தடை விதித்ததாக வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவை என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வாசு தகவல் அளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: