போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம்: நிதின் கட்கரி

டெல்லி: போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரித்துள்ளார். மத்திய அரசு சமீபத்தில் மோட்டார் வாகன  திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி ஹெல்மெட் அணியாமல்  செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்  ஆகியோருக்கான அபராத தொகை ரூ.100ல் இருந்து 1,000மாக உயர்ந்துள்ளது. அதேபோல  மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000ல் இருந்து 10  ஆயிரமாக வசூலிக்கப்படுகிறது.

Advertising
Advertising

இதுபோல பல விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு முன்பை விட 10 மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பல  தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உட்பட 6 மாநிலங்கள், மத்திய அரசின்  இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன. இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில்; போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.

விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது; அரசின் வருமானத்தை பெருக்க அல்ல. சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை. சாலை விபத்தில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பவர்கள் இளைஞர்களே. அபராதம் மூலம் கிடைக்கும்,வருமானம் மாநில அரசுகளுக்கு தான் செல்லுமே தவிர, மத்திய அரசுக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

Related Stories: