கொசுக்களை பயன்படுத்தி சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் புதிய முயற்சி

வியட்நாம்: கொசுக்களை பயன்படுத்தி சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொசுக்களின் உடலில் நோய் எதிர்ப்பு பாக்டீரியாவை செலுத்தி அதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். பாக்டீரியா செலுத்திய கொசுக்களால் உருவாகும் புதிய கொசுக்கள் நோயை பரப்புவதற்கு எதிரான தன்மையை பெரும் என தெரிவித்துள்ளனர். முள்ளை முள்ளால் எடுப்பது போல் கொசுவை வைத்தே அவை பரப்பும் டெங்கு, ஜிகா நோய்களை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளில் இந்த புதிய திட்டம் வெற்றி என வியட்நாம் விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: