பெங்களுருவில் டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக போராட்டம் நடப்பதால் முக்கிய இடங்களில் கடைகள் அடைப்பு

பெங்களூரு: பெங்களுருவில் டி.கே.சிவக்குமாருக்கு ஆதரவாக போராட்டம் நடப்பதால் முக்கிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. இதனால் பசவனக்குடி, ஜே.சி.சாலை, மைசூர் பேங்க் சர்க்கிள், மினர்வா சர்க்கிள், நேஷனல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், பசவனக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் முக்கிய சாலைகள் வழியாக பேரணி நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: