கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூரு பசவனகுடியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக ஒக்கலிக சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பெங்களுருவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் டி.கே.சிவகுமார் அமலாக்கப்பிரிவால் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: