இ-சிகரெட்டுகளும் உடல்நலத்திற்கு தீங்கானவை தான்: இளைஞர்கள் விலகியிருக்குமாறு அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: சிகரெட்டிற்கு மாற்றாக இளைஞர்களிடையே பிரபலமாகி வரும் இ-சிகரெட்டுகளும் உடல்நலத்திற்கு தீங்கானவை தான் என்று அமெரிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் இ-சிகரெட் பயன்படுத்திய 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 450 பேர் நுரையீரல் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, இ-சிகரெட்டை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று அமெரிக்க மருத்துவர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. சிகரெட்டுகளால் நேரிடும் உடல்நலக் குறைப்பாடுகளுக்கு இ-சிகரெட்டுகள் விடைகொடுக்கும் என்ற தனியார் நிறுவனங்களின் உத்தரவாதத்தில் உண்மை இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் உறுதி மொழியை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertising
Advertising

ஆகவே, இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவதில் இருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய மருத்துவர் ஒருவர், புகைப்பிடப்பதன் மூலம் நிக்கோட்டின் என்ற ரசாயனம் நுரையீரல் உள்ளே செல்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதால் மட்டுமே நுரையீரல் பாதிக்கப்படுகிறது என்பதையும் நாம் உணர வேண்டும். ஒவ்வொரு முறையும் புகையை உள் இழுப்பதால் ரசாயனத் உள்ளே சென்று நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: