இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை: ஸ்டாலின் பேட்டி

ராமநாதபுரம்: பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர் இமானுவேல் அவர்கள். அது மட்டுமல்லாமல் அகில இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1950-ம் ஆண்டு விடுதலை இயக்கத்தை கண்டவர் ஆவார். அதேபோல 1954-ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தி போராட்டம் நடத்தியவர் இமானுவேல்.  எனவே அவருடைய புகழ் நீடித்து நிலைக்க வேண்டும் என கூறினார்.  

கொள்ளிடம் ஆற்றில் வரும் காவிரி நீரை கொள்ளிடம் ஆற்றில் வரும் காவிரி நீரை வினாடிக்கு 20,000 கன அடி வீதம் வீணாக கடலில் கலந்துவிடுவதாக அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டாவில் கடைமடை இடங்கள் பலவற்றுக்கு நீர் சென்று சேராத நிலையில் கடலில் கலக்கிவிடப்படுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தை அதிமுக அரசு கைவிட்டதாக புகார் தெரிவித்தார். கடந்த ஆண்டு கொள்ளிடம் வழியே 100 டிஎம்சி நீர் கடலில் கலந்த நிலையில் தற்போது வினாடிக்கு 20,000 கன ஆதி அடி நீர் வீணாகிறது.

குடிநீருக்கு பயன்பட வேண்டிய தண்ணீர் பயனற்று கடலுக்கு செல்வதாக திமுக தலைவர் வேதனை தெரிவித்துள்ளார். கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை ரூ.480 கோடியில் கதவணை மற்றும் தடுப்பணை காட்டப்படும் என்ற ஜெ. அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை. கடலில் கலக்கும் காவிரி நீரை வேளாண்மை, குடிநீருக்கு பயன்படுத்தும் தொலைநோக்கு திட்டமும் அக்கறையும் எடப்பாடி அரசுக்கு இல்லை. மேலும் இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை எனவும் விமர்சனம் செய்தார்.

Related Stories: