ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 29,072க்கு விற்பனை : ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 1,048 குறைந்தது.

சென்னை :  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 29,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.3,634க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து ரூ.51,20க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரே வாரத்தில் தங்கம் விலை ச்வரனுக்கு ரூ. 1,048 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை  உயர்ந்து, உச்சத்தை தொட்ட  நிலையில், கடந்த திங்கள்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தது.

இந்த நிலை நேற்றும் தொடர்ந்தது. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.29,192க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றும்  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 29,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரூ.29,928க்கு விற்பனையான சவரன் தங்கம் ரூ.856க்கு குறைந்து ரூ.29,072க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 காசுகள் குறைந்து ரூ.51,20க்கும் பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.51,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Sales, Shaving, Gold, Silver, World Market
× RELATED ரூ.235 கோடி செலவில்...