கொள்ளிடம் ஆற்றில் வரும் காவிரி நீர் வீணாக கடலில் கலந்து விடுவதாக அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

ராமநாதபுரம்: கொள்ளிடம் ஆற்றில் வரும் காவிரி நீரை வினாடிக்கு 20,000 கன அடி வீதம் வீணாக கடலில் கலந்துவிடுவதாக அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டாவில் கடைமடை இடங்கள் பலவற்றுக்கு நீர் சென்று சேராத நிலையில் கடலில் கலக்கிவிடப்படுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தை அதிமுக அரசு கைவிட்டதாக புகார் தெரிவித்தார். கடந்த ஆண்டு கொள்ளிடம் வழியே 100 டிஎம்சி நீர் கடலில் கலந்த நிலையில் தற்போது வினாடிக்கு 20,000 கன ஆதி அடி நீர் வீணாகிறது என தெரிவித்துள்ளார். குடிநீருக்கு பயன்பட வேண்டிய தண்ணீர் பயனற்று கடலுக்கு செல்வதாக திமுக தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: