போர்ச்சுகல் கால்பந்து வீரரான கிறிஷ்டியன் ரொனால்டோ ஐரோப்பிய தகுதிச் சுற்று ஆட்டங்களில் 24 கோல்கள் அடித்து சாதனை

போர்ச்சுகல்: ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்களில் அதிக கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை படைத்தார். போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஷ்டியன் ரொனால்டோ ஐரோப்பிய தகுதிச் சுற்று ஆட்டங்களில் 24 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். லிதுவேனியாவுக்கு எதிராக 4 கோல்கள் அடித்ததுடன், தகுதிச்சுற்று ஆட்டங்களில் ரொனால்டோவின் கோல் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது. அயர்லாந்து கால்பந்து வீரர் ராபி கீன் 23 கோல்கள் அடித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள்(93) அடித்த ஐரோப்பிய கால்பந்து வீரர் என்ற சாதனையும் ரொனால்டோ வசமே உள்ளது.


Tags : Christian Ronaldo ,Portugal ,European , Portugal, Christian Ronaldo, Goals, Adventure
× RELATED இந்தியா - போர்ச்சுக்கல் 7 ஒப்பந்தம் கையெழுத்து