ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல்: பதற்றத்தை தொடர்ந்து பாதுக்காப்பு அதிகரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய தீவிரவாத தாக்குதலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் நள்ளிரவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு  மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2001, செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது விமானங்களை மோதி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்தின் 19-ம் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நள்ளிரவில் ராக்கெட் குண்டு  மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

தூதரக வளாகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின. தாக்குதலையடுத்து, நிகழ்விடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள், பாதுகாப்பு படையினர் கொண்டு வந்தனர் தாக்குதல் நடைபெற்ற துதரகத்தில் அருகில் தான் நேட்டோ படையினரும் முகாமிட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்; இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Tags : embassy ,US ,Kabul ,Afghanistan , Attack near the US embassy: An increase in security following tension
× RELATED பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை...