ஆப்பிள் நிறுவனம் டிரிபிள் கேமரா வசதியுடன் கூடிய ஐபோன்கள் வெளியீடு: ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்

கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனம் புதியதாக டிரிபிள் கேமரா வசதியுடன் கூடிய மூன்று ஐ.போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பலரும் எதிர்பாரத்துக் காத்திருந்த ஆப்பிள் ஈவென்ட் 2019 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தின் க்யூபெர்டினோ நகரிலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆப்பின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு அதனுடைய விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி விளக்கினார். ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 11 ஒருபக்கம் மக்களை பெரிய ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் முதல்முறையாக ஐபோன் நிறுவனம் புரோ வெர்ஷன்களை வெளியிட்டுள்ளது.

Advertising
Advertising

ஐபோன் 11: iPhone 11

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு லென்ஸ்களும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று வைடு ஆங்கிள் சென்சார் மற்றொன்று அல்ட்ரா வைடு சென்சார் ஆகும். இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐபோன்களில் முதல் முறையாக செல்ஃபி கேமராவில் ஸ்லோ மோஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 11  விலை 699 டாலர்கள் என (சுமார் ரூ.64,900)  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 11 ப்ரோ  iPhone11Pro

ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் மாடலாக ஐபோன் 11  ப்ரோ  அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மூன்று பிரைமரி கேமரா செனசார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மாடலில் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12MP WideCamera, 12MP TelePhoto Camera, 12MP Altra Wide Camera வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் ஃப்ரோ 11 விலை 999 டாலர்கள் என (சுமார் ரூ. 99,900) என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு மாடலானான ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை 1099 டாலர்கள் ( சுமார் ரூ.1,09,900 முதல்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 27ம்தேதி தொடங்குகிறது.

Related Stories: