பைக்கில் போன வாலிபருக்கு சீட்பெல்ட் அணியாமல் சென்றதாக அபராதம்: கோவையில் காமெடி

கோவை:  கோவைநகரில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஹெல்மெட் அணியாமல் செல்வது,அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டுவது உள்ளிட்ட  விதிமீறல்களில் ஈடுபடுவோரை பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி கோவை காளப்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவருடைய மகன் கார்த்திக்(27) என்பவர் பைக்கில் வேலாந்தாவளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக  தெரிகிறது.

இதனையடுத்து, அவரை வழிமறித்த போக்குவரத்து போலீசார் ‘சீட் பெல்ட்’ அணியவில்லை என்று ரசீதில் எழுதி ₹100 அபராதம் வசூலித்துள்ளனர். இதனை தொடர்ந்து கார்த்திக் கூறுகையில், போக்குவரத்து போலீசார் எந்த விதிமீறலில்  ஈடுபடுகிறோம் என்பதை ரசீதில் தெளிவாக குறிப்பிடுவதில்லை. அபராதம் வசூலிப்பதை கூட காமெடி ஆக்கிவிட்டனர். அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தாலும் சில போலீசார் 100ஐ கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று கறாராக  கூறுகின்றனர் என தெரிவித்தார்.

Related Stories: