போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ. வைரலாகும் வீடியோ

சேலம்: சேலம், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்குகளை விசாரிக்கும் எஸ்ஐ ஒருவர், கடந்த சில  நாட்களுக்கு முன் ஸ்டேஷனில் இருந்தபடி விசாரணைக்கு வந்த வாலிபரிடம் இருந்து ஒரு கட்டு பணத்தை வாங்கி, மேஜைக்குள்  வைக்கும் வீடியோ வாட்ஸ்அப் குரூப்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பணத்தை எடுத்துக் கொடுக்கும் காட்சியும், அதை எஸ்ஐ வாங்கி, தனது மேஜையின் அடியில் வைக்கும் காட்சியும் 7 விநாடியில் ஓடி முடிகிறது. ஒரு கட்டு பணத்தை வாங்கியதும், அங்கு ஓரமாக உட்கார் என அந்த  வாலிபரிடம் எஸ்ஐ கூறுகிறார்.இந்த வீடியோவை பார்த்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இவ்விவகாரம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: