கந்தன்சாவடி அருகே போலீஸ் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: மர்ம நபர்களுக்கு வலை

சென்னை: முன்விரோதம் காரணமாக போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திய நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.திருப்போரூர் அடுத்த ஆம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (43). துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளது.நேற்று அதிகாலை பணியை முடிந்து வேலை விஷயமாக புருஷோத்தமன் திருவான்மியூருக்கு பைக்கில் வந்தார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக கந்தன்சாவடி வழியாக சென்று கொண்டிருந்தார்.

Advertising
Advertising

அப்போது அவ்வழியாக வந்த 4 மர்ம நபர்கள் அவரை வழிமடக்கி சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். இதனால் ரத்தவெள்ளத்தில் அலறி துடித்த அவர் சிறிதுநேரத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் ஏட்டு புருஷோத்தமன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புருஷோத்தமனை தாக்கிய மர்ம நபர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா என்று விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: