அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 3 நாட்கள் அதிமுக பொதுக்கூட்டம்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள், `அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’ அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட  அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.அதிமுக மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதன்படி முதல்வர் எடப்பாடி வருகிற 15ம் தேதி சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும்  பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

Tags : birthday ,announcement ,OPS , anticipation , Anna's ,birthday, EPS ,OPS
× RELATED பட்டாக்கத்தியால் கேக் வெட்டி...