நதீம் அபார பந்துவீச்சு தென் ஆப்ரிக்கா ஏ திணறல்

திருவனந்தபுரம்: இந்தியா ஏ அணியுடனா முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), தென் ஆப்ரிக்கா ஏ அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து திணறி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு சுருண்டது (51.5 ஓவர்). அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் ஷுப்மான் கில் 66 ரன், அங்கித் பாவ்னே 6 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பாவ்னே மேற்கொண்டு ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். கில் 90 ரன் (153 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), கர் பரத் 33, துபே 8, கவுதம் (0), ஷர்துல் 34 ரன் எடுக்க... நதீம், சிராஜ் டக் அவுட்டாகி வெளியேறினர். இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 303 ரன் குவித்து ஆல் அவுட்டானது (87.5 ஓவர்). ஜலஜ் சக்சேனா 61 ரன்னுடன் (96 பந்து, 11 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத் தொடர்ந்து, 139 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா ஏ அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்துள்ளது. ஸுபேர் ஹம்சா 44 ரன் எடுத்தார். கிளாசன் 35, முல்டர் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ பந்துவீச்சில் நதீம் 2 விக்கெட் (9-3-13-2), சிராஜ், தாகூர், கவுதம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க தென் ஆப்ரிக்கா ஏ அணி இன்னும் 14 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : Nadeem Bowling ,South Africa A. Strain
× RELATED ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் இன்னிங்ஸ், 164...