காஷ்மீர் விவகாரம்: உள்விவகாரத்தில் அந்நிய நாடு எதுவும் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: பாகிஸ்தானுக்கு இந்தியா பதில்

ஜெனீவா: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம், ஜெனீவா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இக்கூட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்திய ஆணையத் தலைவர் மிச்சல் பாச்லெட், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பான 115 அறிக்கையை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தாக்கல் செய்தார்.

Advertising
Advertising

பின்னர் பேசிய அவர்; காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மை முஸ்லிம்களை வலுக்கட்டாயமான நடவடிக்கைகளால் சிறுபான்மையினராக்குகிறது இந்தியா.  ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பயங்கரவாதத்தின் பெயரால் சர்வதேச நாடுகளை திசைதிருப்புகிறது இந்தியா. காஷ்மீர் நிலவரத்தை பன்னாட்டு அமைப்புகள் பார்வையிடுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்வதேச அமைப்புகள் ஆய்வு நடத்த நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஜம்மு காஷ்மீர் மாநிலமே சிறைகூடமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ஷா மெகமூத் குரேஷி பேசினார்.

காஷ்மீர் தொடர்பாக ஐ.நா மனித உரிமை அமைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் கூறிய புகார்களுக்கு இந்தியா பதில் அளித்து பேசியது. இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் தாக்குர் சிங் ஐ.நா மனித உரிமை அமைப்பில் பேசினார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. தீவிரவாதத்தின் மையமாக விளங்குவது பாகிஸ்தானே என கூறினார். ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகளைக் காக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாகவே காஷ்மீரில் தற்காலிகமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் உள்விவகாரம். இந்திய நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்துதான் காஷ்மீர் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் உள்விவகாரத்தில் அந்நிய நாடு எதுவும் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என விஜய் தாக்குர் சிங் பேசினார்.

Related Stories: