பாரத ஸ்டேட் வங்கி கடன் வட்டி குறைப்பு

புதுடெல்லி: பாரத ஸ்டேட் வங்கி, நடப்பு நிதியாண்டில் 5வது முறையாக, கடன்களுக்கான வட்டியை 0.10 சதவீதம் குறைத்துள்ளது.ரெப்போ வட்டி குறைப்புக்கு ஏற்ப வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என  ரிசர்வ் வலியுறுத்தியது. அதோடு, அக்டோபர் முதல் புதிய வட்டி நிர்ணய முறை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்து  5வது முறையாக வட்டியை குறைத்துள்ளது. இதன்படி, கடன் வட்டியில் 10 அடிப்படை புள்ளிகள், அதாவது, 8.25 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக குறைத்துள்ளது. இத்துடன் சேர்த்து நடப்பு நிதியாண்டில் இந்த வங்கி மொத்தம் 0.40 சதவீதம்  குறைத்துள்ளது. ரெப்போ வட்டிக்கு ஏற்ப டெபாசிட் வட்டிகளும் குறைக்கப்பட்டுள்ளன. சில்லரை டெர்ம் டெபாசிட்களுக்கு வட்டி 0.20-0.25 சதவீதம், மொத்த டெர்ம் டெபாசிட்களுக்கு வட்டி 0.1 - 0.2% வரை குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: