பொருளாதார மந்த நிலையால் நகை தொழிலிலும் வேலையிழப்பு

கொல்கத்தா: பொருளாதார மந்த நிலை, அதிக ஜிஎஸ்டி போன்றவற்றால் நகை தொழில் துறையில் வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய நவரத்தினம் மற்றும் நகை விற்பனையாளர் கவுன்சில் தெரிவித்துள்ளது.பொருளாதார மந்த நிலை, ஜிஎஸ்டி ஆகியவற்றால் சூரத்தில் உள்ள வைர நகை தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில், அகில இந்திய நவரத்தினம் மற்றும் நகை விற்பனையாளர்  கவுன்சில் துணை தலைவர் சங்கர் சென்  நேற்று கூறியதாவது:பொருளாதார மந்த நிலையால் நகை தொழில் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகை விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் திறமையான நகை விற்பன்னர்கள் கூட வேலை இழக்கக்கூடிய அபாய நிலையில் உள்ளனர்.  

Advertising
Advertising

விற்பனை பல ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.  மத்திய அரசு பட்ஜெட்டில், இறக்குமதி தங்கத்துக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.  ஜிஎஸ்டியை ஒரு சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். அதிக வரியால் தங்கம் கடத்தல் அதிகரித்து விட்டது.சொத்து முதலீடுகளில் தங்கம் முக்கியமாக இருப்பதால், நகை வாங்குவதற்கு இஎம்ஐ திட்டத்தை அரசு அறிமுகம் செய்ய வேண்டும். ₹2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கட்டாயம் என்பதை ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.

Related Stories: