×

துளித்துளியாய்......

* ஓவல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
* இந்தியா ஏ அணியுடன் திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு சுருண்டது (51.5 ஓவர்). அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி முதல் நாள்  ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்துள்ளது (38 ஓவர்). ருதுராஜ் 30, ரிக்கி புயி 26 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் கில் 66 ரன், அங்கித் பாவ்னே 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
* யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா யு-19 அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் யு-19 அணியை நேற்று வீழ்த்தியது. ஆப்கன் யு-19 அணி 40.1 ஓவரில் 124 ஆல் அவுட்; இந்தியா யு-19 அணி  38.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்.
* ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி ரஷ்யாவையும், இந்திய மகளிர் அணி அமெரிக்காவையும் எதிர்கொள்கின்றன.
* பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள ஒரு கேலரிக்கு கேப்டன் கோஹ்லி பெயர் சூட்டப்படுகிறது. நாளை மறுநாள் நடைபெறும் இதற்கான விழாவில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags : Trickle ......
× RELATED திமுக முப்பெரும் விழா விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு