×

வங்காளதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான்

சட்டோகிராம்: வங்காளதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசத்தில் உள்ள சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 342 ரன் எடுத்தது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 205 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டத்தை இழந்தது. 137 ரன்கள் முன்னிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் 260 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் வங்காளதேச அணிக்கு 398 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் நேற்றைய 4-வது நாள் ஆட்டம் நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து திணறிய நிலையில் இருந்தது. வங்காளதேச வெற்றிக்கு மேலும் 262 ரன் தேவைபட்டன.

அப்போது 4 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. இந்நிலையில் வங்காளதேச அணியின் 4 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலை ஆப்கானிஸ்தானுக்கு இருந்தது. இன்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலை சீரானதையடுத்து  ஆட்டம் தொடங்கியது. சவுமியா சங்கர் மற்றும் சகிப் அல்ஹசன் நிதானமாக விளையாடினர். சகிப் அல்ஹசன் (44) வெளியேறினார். அடுத்து வந்த வீரகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். கடைசி விக்கெட்டுக்கு சவுமியா சங்கர் உடன் ஜோடி சேர்ந்த ஹசன் பொறுப்புடன் விளையாடினார்.

61.4 ஓவரில் ரஷித்கான் பந்து வீச்சில் சவுமியா சங்கர் ஆட்டமிழந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தான் வென்றது. 224 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்று ஆப்கானிஸ்தான் சாதனை படைத்துள்ளது.


Tags : Afghanistan ,Test match ,Bangladesh , Bangladesh team, Test match, win, Afghanistan
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி