Self Lifeனா என்னன்னு தெரியுமா?

சூப்பர் மார்க்கெட்டில் உணவுப் பொருட்கள் வாங்கும்போது அதன் லேபிளில் பெஸ்ட் பை டேட், யூஸ் பை டேட், ஓப்பன் டேட் என்றெல்லாம் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொருவிதமாய் அச்சிட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இந்த ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்னு தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதானே?

Use by date

யூஸ் பை என்று குறித்திருந்தால் அந்த உணவுப் பொருட்களை அதில் குறிப்பிட்டிருக்கும் தேதிக்கு முன்பாகவே பயன்படுத்த வேண்டும். அதைக் கடந்து பயன்படுத்தினால், ஃபுட் பாய்சன் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதேபோல யூஸ் பை என்று குறிப்பிட்டிருக்கும் பொருட்களை அதில் குறிப்பிட்டுள்ளபடி பாதுகாப்பான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். பால், நெய் போன்ற உணவுப் பொருட்கள் இந்தப் பிரிவில் அடங்கும். அதுபோலவே சில உணவுப் பொருட்களின் குறித்த தேதிக்கு முன்பாக என்றும் அச்சிட்டிருப்பார்கள்.

Open dating

ஒரு பொருள் எப்போது இருந்து சந்தையில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை வாடிக்கையாளர் அறிந்துகொள்வதற்காக இந்த ஓப்பன் டேட் முறை அச்சிடப்படுகிறது. நீங்கள் பார்க்கும் போது ஒரு  பொருளின் ஓப்பன் டேட் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தால் கடந்த இருமாதங்களாக அது விற்பனைக்கு தயாராக இருக்கிறது என்று பொருள். இதற்கும் யூஸ் பை தேதிக்கும் தொடர்பு இருக்காது. ஒருவேளை தொடர்பு இருந்தால் அதுவும் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

Best before or Best by date

உறைபனிநிலையில் குளிரூட்டப்பட்ட பொருட்கள், உலர்ந்த பொருட்கள், டின் பொருட்கள் போன்றவற்றில் இப்படி அச்சிட்டிருப்பார்கள். இந்தப் பொருட்களை இதில் குறிப்பிட்டிருக்கும் காலத்துக்குள் பயன்படுத்தினால் இதன் தரம் சிறப்பாக இருக்கும் என்பதே இதன் பொருள். இந்தத் தேதிக்குப் பிறகு பயன்படுத்தினால் பிரச்னை ஏதும் இருக்காது. உலர்ந்த பொருட்கள் என்றால் நமத்துப்போயிருக்கக்கூடும்; டின் பானங்கள் என்றால் சுவை குறைந்துப் போயிருக்கக்கூடும். சில சமயங்களில் கோழி முட்டை அட்டையில் இந்த வாசகத்தை அச்சடித்திருப்பார்கள். கோழி முட்டைகளில் சால்மோனெல்லா எனும் உடலுக்கு தீங்கு செய்யும் பாக்டீரியா பரவக்கூடும் என்பதால் அதை மட்டும் குறித்த தேதிக்கு முன்பாகவே பயன்படுத்த வேண்டும்.

Sell by (or) Display until

சூப்பர் மார்க்கெட்களில் முதலில் எக்ஸ்பயரி ஆகும் பொருட்கள் முன் வரிசையிலும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அதன் பின்புறமும் அடுக்கப்பட்டிருக்கும். புதிதாக உற்பத்தியாகி கடைக்கு வந்த பொருட்களை முன் வரிசையில் அடுக்கினால் பின் வரிசையில் உள்ள பொருட்கள் காலாவதியாகி வீணாகிவிடும் என்பதற்காக இப்படி அடுக்குவார்கள். செல் பை அல்லது டிஸ்ப்ளே அண்ட்டில் அச்சிடப்படுவது விற்பனையாளர்களின் வசதிக்காகத்தான். சரக்குகளை தேதிவாரியாகப் பயன்படுத்தவே இவை அச்சிடப்படுகின்றன. செல் பை தேதிக்குப் பிறகும் ஒரு பொருளில் யூஸ் பை தேதி இருந்தால் குழம்ப வேண்டாம். தாராளமாக அந்தப் பொருளைப் பயன்படுத்தலாம். ஆனால், நடைமுறையில் பெரிய சூப்பர் மார்க்கெட்களில் செல் பை முடிந்த பொருட்களை வைத்திருக்கமாட்டார்கள்.

Related Stories: