சிகப்பு
உண்ண வேண்டியவை : தக்காளி, மாதுளை, சிவப்பு கொய்யா, தர்பூசணி என்னென்ன சத்து? : லைக்கோபீன், எலாஜிக் ஆசிட், குவர்சிடின், ஹெஸ்பெரிடின் (Hesperetin), அந்தோசியானிடின் (Anthocyanidin)
என்ன பலன்? : ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கள் உட்பொருட்களைக் கொண்டுள்ளன. சிறுநீரகப் பாதையைப் பாதுகாக்கும். இதய நோய், ப்ராஸ்டேட் பிரச்னை வராமல் தடுக்கும். புற்றுநோயை எதிர்க்கும்.
நீலமும் ஊதாவும்உண்ண வேண்டியவை : திராட்சை, கத்திரிக்காய், பர்பிள் முட்டைக்கோஸ்என்னென்ன சத்து? : ஃபிளேவனாய்டு, ஃபீனோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Phenolic antioxidants), ரெஸ்வெரட்ரால் (Resveratrol), ஆந்தோசியானின் (Anthocyanin)என்ன பலன்? : இதயம், மூளை, எலும்புகள், ஆர்ட்டரி, நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு நல்லது. புற்றுநோய்களை எதிர்க்கும். முதுமையைத் தாமதப்படுத்தும்.
பச்சைஉண்ண வேண்டியவை : கீரைகள், வெள்ளரி, குடமிளகாய், அவரை, பீன்ஸ்என்னென்ன சத்து? : சல்ஃபொரபேன் (Sulforaphane), ஐசோதியோசயனேட் (Isothiocyanate), இன்டோல்ஸ் (Indoles), ஐசோஃபிளேவோன்ஸ் (Isoflavones)என்ன பலன்? : கண்கள், ஈறுகள், ஆர்ட்டரி, நுரையீரல், கல்லீரல், செல்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். காயங்களைக் குணப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும். சருமத்துக்கு எலாஸ்டிசிட்டி தரும். இதயச் செயல்பாடுகள் மேம்பட உதவும்.
வெள்ளைஉண்ண வேண்டியவை : முட்டைக்கோஸ், பூண்டு, காலிஃபிளவர்என்னென்ன சத்து? : அலிசின், குவர்சிடின், இன்டோல்ஸ், குளுக்கோசினோலேட் (Glucosinolate)என்ன பலன்? : எலும்புகள், சர்குலேட்டரி சிஸ்டம், ஆர்ட்டரியல் செயல்பாடு ஆரோக்கியமாக்கும். இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கும். எலும்பு மெலிதல் நோயைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலை டீடாக்ஸ் செய்ய வெள்ளை நிற உணவுகள் உதவும்.
மஞ்சளும், ஆரஞ்சும்உண்ண வேண்டியவை : கேரட், மாம்பழம், பப்பாளி, பரங்கிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சுஎன்னென்ன சத்து? : ஜிஸாந்தின்(Zeaxanthin), ஆல்ஃபாகரோட்டின், பீட்டாகரோட்டின், லுட்டின்என்ன பலன்? : பார்வைத்திறன் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். உடல் வளர்ச்சிக்கு உதவும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயதுக்கு நல்லது.