×

அஞ்சு வண்ணம்! ஆயிரம் பலன்கள்!!

சிகப்பு

உண்ண வேண்டியவை : தக்காளி, மாதுளை, சிவப்பு கொய்யா, தர்பூசணி
என்னென்ன சத்து? : லைக்கோபீன், எலாஜிக் ஆசிட், குவர்சிடின், ஹெஸ்பெரிடின் (Hesperetin), அந்தோசியானிடின் (Anthocyanidin)
என்ன பலன்? : ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கள் உட்பொருட்களைக் கொண்டுள்ளன. சிறுநீரகப் பாதையைப் பாதுகாக்கும். இதய நோய், ப்ராஸ்டேட் பிரச்னை வராமல் தடுக்கும். புற்றுநோயை எதிர்க்கும்.

நீலமும் ஊதாவும்

உண்ண வேண்டியவை : திராட்சை, கத்திரிக்காய், பர்பிள் முட்டைக்கோஸ்
என்னென்ன சத்து? : ஃபிளேவனாய்டு, ஃபீனோலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Phenolic antioxidants), ரெஸ்வெரட்ரால் (Resveratrol), ஆந்தோசியானின் (Anthocyanin)
என்ன பலன்? : இதயம், மூளை, எலும்புகள், ஆர்ட்டரி, நினைவுத்திறன் ஆகியவற்றுக்கு நல்லது. புற்றுநோய்களை எதிர்க்கும். முதுமையைத் தாமதப்படுத்தும்.

பச்சை

உண்ண வேண்டியவை : கீரைகள், வெள்ளரி, குடமிளகாய், அவரை, பீன்ஸ்
என்னென்ன சத்து? : சல்ஃபொரபேன் (Sulforaphane), ஐசோதியோசயனேட் (Isothiocyanate), இன்டோல்ஸ் (Indoles), ஐசோஃபிளேவோன்ஸ் (Isoflavones)
என்ன பலன்? : கண்கள், ஈறுகள், ஆர்ட்டரி, நுரையீரல், கல்லீரல், செல்கள் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும். காயங்களைக் குணப்படுத்த உதவும். எலும்புகளை உறுதியாக்கும்.  சருமத்துக்கு எலாஸ்டிசிட்டி தரும். இதயச் செயல்பாடுகள் மேம்பட உதவும்.

வெள்ளை

உண்ண வேண்டியவை : முட்டைக்கோஸ், பூண்டு, காலிஃபிளவர்
என்னென்ன சத்து? : அலிசின், குவர்சிடின், இன்டோல்ஸ், குளுக்கோசினோலேட் (Glucosinolate)
என்ன பலன்? : எலும்புகள், சர்குலேட்டரி சிஸ்டம், ஆர்ட்டரியல் செயல்பாடு  ஆரோக்கியமாக்கும். இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கும். எலும்பு மெலிதல்  நோயைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடலை டீடாக்ஸ் செய்ய  வெள்ளை நிற உணவுகள் உதவும்.

மஞ்சளும், ஆரஞ்சும்

உண்ண வேண்டியவை : கேரட், மாம்பழம், பப்பாளி, பரங்கிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சு
என்னென்ன சத்து? : ஜிஸாந்தின்(Zeaxanthin), ஆல்ஃபாகரோட்டின், பீட்டாகரோட்டின், லுட்டின்
என்ன பலன்? : பார்வைத்திறன் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். உடல்  வளர்ச்சிக்கு உதவும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதயதுக்கு  நல்லது.



Tags : Five,color,benefits
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்