எம்ப்ராய்டரி குரான்

நன்றி குங்குமம்

ஊசியில் நூல் கோர்த்து துணிகளைத்தான் தைக்க முடியும். இஸ்லாமிய புனித நூலான குரானை உருவாக்க முடியுமா?

‘‘முடியும்...’’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார் பாகிஸ்தானிய பெண்மணி நசீம் அக்தர்.குரானில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் துணியில் எம்பிராய்டரி செய்து உலகமே வியக்கும் மெகா குரானை வடிவமைத்திருக்கிறார் நசீம். மொத்தம் 10 பாகங்கள். ஒவ்வொரு பாகமும் 5.5 கிலோ எடை கொண்டது. முப்பது வயதில் தொடங்கிய இந்த ஆன்மிகப் பணியை நிறைவு செய்யும்போது நசீமின் வயது 62.

முதல் 15 வருடங்கள் சாக்பீஸ் கொண்டு துணியின் மீது குரானை எழுதியிருக்கிறார். அடுத்த 17 வருடங்கள் அந்த எழுத்துகளின் மீது கருப்பு நூலைக்கொண்டு கையாலேயே எம்ப்ராய்டரி செய்திருக்கிறார். இதற்காக 300 மீட்டர் துணியும் 25,000 மீட்டர் நூலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஹோலி குரான் கண்காட்சியில் நசீமின் குரானும் பார்வைக்கு வைக்கப்பட்டது சிறப்பு.         

Related Stories: