ஒப்பந்தம் பெற லஞ்சம் ரோல்ஸ் ராய்ஸ் மீது அமலாக்கத்துறை வழக்கு

புதுடெல்லி: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.  கடந்த 2007-2011 காலக்கட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஓஎன்ஜிசி, கெயில் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க ஏஜென்டுக்கு கமிஷனாக ₹77 கோடிக்கு மேல் கமிஷன் பெற்றுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் ரோல்ஸ் ராய்ஸ்சின் இந்திய நிறுவனம், சிங்கப்பூரை சேர்ந்த அசோக் பாட்னி மற்றும் அவரது நிறுவனங்களான ஆஸ்மோர் பிரைவேட் லிமிடெட், மும்பையை சேர்ந்த டர்போ டெக் இன்ஜின் சர்வீசஸ் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது லஞ்சம் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்சுடன் மட்டும் கடந்த 2000 முதல் 2013ம் ஆண்டு வரை ₹4,700 கோடி வர்த்தக வாய்ப்பை ரோல்ஸ் ராய்ஸ் பெற்றுள்ளது.

 இந்துஸ்தான் ஏராநாட்டிக்சிடம் 100 அவான் மற்றும் அலிசான் இன்ஜின் உதிரி பாகங்களை சப்ளை செய்ய ஏஜென்டாக செயல்பட்ட அசோக் பாட்னிக்கு ‘வர்த்தக ஆலோசகர்’ என்ற வகையில் மட்டும் ₹18 கோடியை ரோல்ஸ் ராய்ஸ் வழங்கியுள்ளது என முதல் தகவல் அறிக்கையில் அறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல் ஓஎன்ஜிசியிடம் 73 ஆர்டர்களை பெற ₹29.81 கோடி, கெயிலிடம் ஆர்டர் பெற 10 லட்சம் பிரிட்டிஷ் பவுண்ட்  (சுமார் ₹8.8 கோடி). இதற்காக மொத்த கமிஷனாக ₹28.09 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிபிஐயின் இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Related Stories: