முதல் வாரத்திலேயே வெளிநாட்டவர் முதலீடு ரூ.1,263 கோடி வாபஸ்

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ₹1,263 கோடியை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த மாதம் பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை ₹4,263.79 கோடியை வெளியேற்றினர். ஆனால், இதே நாட்களில் கடன் சந்தையில் ₹3,000.86 கோடியை கடன் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இதனால் நிகர வாபஸ் ₹1,263 கோடியாக உள்ளது என பங்குச்சந்தை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Advertising
Advertising

 இதற்கு முன்பு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் மூலதன சந்தையில் இருந்து கணிசமான அளவுக்கு முதலீட்டை வாபஸ் பெற்றனர். இதன்படி ஜூலையில் ₹5,920.02 கோடி, ஆகஸ்ட்டில் ₹5,920.02 கோடியை விலக்கிக் கொண்டுள்ளனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வரி விதிப்பை அறிவித்தபோது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து ₹30,000 கோடியை வெளியேற்றினர். ஆனால், தற்போது அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப்போரை தணிக்க அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால் வெளிநாட்டு பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றன. இந்த சூழ்நிலையிலும் இந்திய சந்தையில் இருந்து முதலீடு வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: