பனீர் உருளை மசாலா

செய்முறை: வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து பசை போல் வதக்கவும். அதனுடன் நறுக்கிய உருளை, கேரட், பட்டாணி, பனீர் சேர்த்து வதக்கி உப்பு போடவும். அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்து எடுத்த மசாலாவை, வதக்கிய கலவையில் ஊற்றி மஞ்சள் தூள், தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் வந்ததும் எடுக்கவும். தேவைப்பட்டால் பனீரை எண்ணெயில் லேசாக பொரித்தும் போடலாம். பனீர் உருளை மசாலா ரெடி. இட்லி, தோசை மற்றும் சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.

Tags : Paneer,cylinder,spice
× RELATED ஆட்டோமொபைல்: அசத்தும் டாடா புதிய 7 சீட்டர் கார்