புதினா இறால் குழம்பு

செய்முறை: இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைக்கவும். புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப்பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் நறுக்கிய ஒரு பல்லாரியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய மற்றொரு பல்லாரியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ளகலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைக்கவும். தொடர்ந்து உப்பு, தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். இறால் வெந்ததும் இறக்கவும். இதம் தரும் சுவையில் புதினா இறால் குழம்பு ரெடி.

Tags : Mint,shrimp, curry
× RELATED ஆட்டோமொபைல்: அசத்தும் டாடா புதிய 7 சீட்டர் கார்