மலபார் நெய் சோறு

செய்முறை: குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பொரிந்து வரும்போது முந்திரி, பாதாம் பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் நறுக்கிய பல்லாரி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.இத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்கும்போது உப்பு மற்றும் களைந்து 15 நிமிடம் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். நன்கு கொதித்து வரும்போது புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். சுண்டி இழுக்கும் சுவையான மலபாய் நெய் சோறு தயார்.

Tags : Malabar,Ghee,Rice
× RELATED ஆட்டோமொபைல்: அசத்தும் டாடா புதிய 7 சீட்டர் கார்