பாம்புத் திருவிழா!

இத்தாலியில் நடக்கின்ற விநோதமான திருவிழா ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்து செம ஹிட்டாகிவிட்டது. 11ம் நூற்றாண்டில் இத்தாலியின் வயல் வெளிகளை விஷப்பாம்புகள் சூழ்ந்திருந்தன. அதனால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மக்களும் வயல்வெளிக்குள் செல்லவே பயந்தனர். அப்போது புனித துறவியான டொமினிக் தனது மாய சக்தியால் பாம்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்; விவசாயமும் செழிப்படைந்தது என்பது அங்கே காலம் காலமாக சொல்லி வரும் ஒரு கதை.

டொமினிக்கை கவுரவிக்கும் விதமாக வருடந்தோறும் மே ஒன்றாம் தேதியன்று பாம்புத் திருவிழா இத்தாலியிலுள்ள கோகுல்லா கிராமத்தில் சிறப்பாக அரங்கேறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முப்பது விதமான விஷமற்ற பாம்புகளைத் தூக்கிக்கொண்டு, வீதியில் ஊர்வலமாக வரும் காட்சியை ஹாலிவுட் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. அடுத்த வருடம் மே மாதம் அரங்கேறும் விழாவுக்காக இப்போதே சிலர் பாம்புகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்!

- த.சக்திவேல்.

Related Stories: