நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களின் வாழ்ககையை வடிவமைக்கும் ஆசிரியர்கள் தினம் இன்று...

ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியராக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பின்னாளில் குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவரது பிறந்த நாளையே ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்தார்.

Advertising
Advertising

சிறுவயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய ராதாகிருஷ்ணன், தத்துவவியலை பாடமாகக் கொண்டு பி. ஏ. பட்டம் பெற்றார், பின்னர் அதே துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர்.  இந்து மத இலக்கியங்கள், மேற்கந்திய சிந்தனைகளையும் கற்றுத் தேர்ந்தவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தனது திறமையால் அறிவால் அனைவராலும் கவரப்பட்டு ஆக்ஸ்போர்டு பல்கழைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பனாரஸ் பல்கழைக்கழக துணைவேந்தர், ஆந்திர பல்கழைக்கழக துணைவேந்தராக பதவி வகித்த இவர் யுனெஸ்கோ தூதுவராகவும் இருந்தவர் ஆவார். 1962 முதல் 1967ஆம் ஆண்டு வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாழ்த்து

சிறந்த வழிகாட்டி, தனித்துவம் மிக்க ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு இந்தியா மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Related Stories: