செயற்கையான மரத்தை உருவாக்கி ‘பயோமிடெக்’ நிறுவனம் அசத்தல்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

‘‘காற்று மாசுபாட்டால் வருடந்தோறும் சராசரியாக 70 லட்சம் பேர் மரணிக்கின்றனர்...’’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அசுத்தமான காற்றை உறிஞ்சி நல்ல காற்றைத் தருகின்ற அற்புதமான திறன் இயற்கையாகவே மரங்களிடம் இருக்கிறது. இதையே முன்மாதிரியாக வைத்து செயற்கையான மரத்தை உருவாக்கியிருக்கிறது ‘பயோமிடெக்’ என்ற நிறுவனம். மெக்சிகோவைச் சேர்ந்த இந்நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பரிசோதனை செய்து இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது. 368 மரங்கள் உறிஞ்சும் அசுத்தமான காற்றை இந்த ஒரே செயற்கை மரத்தால் உறிஞ்ச முடியும் என்பது இதில் ஹைலைட். அப்படியென்றால் இது செயற்கை மரமல்ல; குட்டிக்காடு.

Related Stories: