கண்களைப் பாதிக்கும் காற்று மாசுபாடு

நன்றி குங்குமம் முத்தாரம்

மனிதன் தனக்குத் தானே வைத்துக்கொண்ட ஒரு மனித வெடிகுண்டு காற்று மாசுபாடு என்று சொன்னால் மிகையாகாது. அதனால் ஏற்படும் உடல் தீங்குகளைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. கடந்த வருடம் மட்டும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் காற்று மாசுபாட்டின் காரணமாக உயிரிழந்திருக்கின்றனர்.

குறிப்பாக மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை சுவாசிக்கும்போது நுரையீரல் புற்றுநோய், சுவாசக் கோளாறு, பக்கவாதம், இதய நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்கள் பலரை மரணம் வரை கூட இட்டுச் செல்கின்றன. இந்நிலையில் புது ஆய்வு ஒன்று நம்மை பீதிக்குள்ளாக்குகிறது. ஆம்; கண் சம்பந்தமான நோய்களுக்கும் காற்று மாசுபாடு முக்கிய காரணமாக இருக்கிறதாம்.

தைவானில் உள்ள சீன மருத் துவப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவர் சூ ஹங் ஹாங்க் ஜோ மற்றும் சக மருத்துவர்கள் இணைந்து மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் ஆய்வு செய்தனர். காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணிகளாக இருக்கும் நைட்ரஜன் டையாக்சைட் மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய இரு வாயுக்களும் ரெட்டினாவில் உள்ள செல்களைச் சிதைக்கின்றன. இது அதிகமாகும்போது பார்வை பறிபோகக்கூட வாய்ப்பிருக்கிறது என்று ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார் சூ ஹங் ஹாங்க் ஜோ.

இதற்காக அவர்கள் தைவானில் இருக்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே 50 வயதுக்கு அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வயது முதிர்ந்த வர்களின் கண்களைத்தான் காற்று மாசுபாடு வெகுவாக பாதிக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. சாலையில் செல்கையில் எப்படி சுவாசத்தைப் பாது காக்க முகமூடி அணிதல், துணிகளைச் சுற்றிக்கொள்ளு தல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுகிறோமோ அதே மாதிரி கண்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறது இந்த ஆய்வு.

Tags : Eyes, damage, air pollution, lung cancer
× RELATED இன்று(பிப்.4) உலக புற்றுநோய் தினம் : வரவே வேண்டாம்... வந்தாலும் கவலை வேண்டாம்