×

தாமரை இலையில் ஏன் தண்ணீர் ஒட்டுவதில்லை?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மிக கடுமையாக மழை பெய்தாலும், குளத்தில் எவ்வளவுதான் தண்ணீர் இருந்தாலும், அதில் மிதக்கும் தாமரையின் இலை மீது தண்ணீர் ஒட்டாது. தாமரை இலையின் மேற்பரப்பை ஒரு மைக்ரோஸ்கோப் கீழ் வைத்துப் பார்த்தால் நிறைய நுண்ணிய மேடுகள் இருப்பது தெரியும். மெழுகுபோன்ற படிகங்கள் இவற்றை மூடியிருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். இலைமீது நீர்த்துளிகள் விழும்போது முதலில் அவை இந்த நுண்ணிய மேடுகள் மேல் படுகின்றன. இந்த மேடுகள் இலைமீது நீர் படாதவாறு பாதுகாக்கின்றன. நீர்த்துளிகள் இலைகளைத் தொடாமல் இருப்பதற்கு இலையின் வடிவமும் ஒரு காரணம். பொதுவாகவே தாமரை இலைகளின் ஓரம் சரிந்திருப்பதால் அதன்மீது நீர்த்துளிகள் விழுந்தவுடன் அவை சரிந்து கீழே விழுந்துவிடுகின்றன. அதனால்தான் தாமரை இலை நனையாமல் இருக்கிறது. அதோடு, உருண்டு ஓடும் நீர்த்துளிகள் அழுக்கையும் மண் துகள்களையும் எடுத்துச் செல்வதால் இலை சுத்தமாகவும் இருக்கிறது.


Tags : Lotus leaf, water, microscope, wax crystals
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...