சூரிய மண்டலத்தில் மிதக்கும் விண்கற்கள்

விண்வீழ்கல் (Meteorite) என்பது பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் மிதந்துகொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தின் வழியாக அதிவேகத்தில் வந்தடையும்போது வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்போது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளிமண்டலத்துடன் கலந்துவிடுகின்றன.

சில பூமியிலே விழுந்து பெரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் விண்கல் ஒன்று பூமியை தாக்க யிருக்கிறது என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கணித்துள்ளது. விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் விண்கற்கள் பல அவ்வப்போது பூமியின் புவிவட்டப் பாதைக்கு வந்துவிடும். அப்படி வரும் விண்கற்களை விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மிகக் கூர்மையாக கண்காணித்து அதுபற்றிய தகவல்களை சேகரித்து வெளியிடும். அந்தவகையில், தற்போது பூமியின் வட்டப்பாதைக்கு வந்திருக்கும் விண்கல் ஒன்று அடுத்த ஆண்டு பூமியை தாக்கும் என நாசா கணித்துள்ளது. 1998 OR2 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லின் அசைவுகளை நாசா மிகக் கூர்மையாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

அந்த விண்கல் பூமியிலிருந்து 30.9 லட்சம் மைல் தூரத்தில் இருக்கிறது. அதனால், பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் விண்வெளியில், புறக்காரணங்களால் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே பூமியை தாக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அப்படியான சாத்தியங்கள் ஏற்பட்டால், 13,500 அடி சுற்றளவு கொண்ட 1998 OR2 என்ற விண்கல், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி மாலை 3.26 மணிக்கு பூமியை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து அதிக தொலைவில் இந்த விண்கல் இருந்தாலும், நாசா வெளியிட்டுள்ள இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Tags : Meteors,floating,solar system
× RELATED உலகின் மிகப்பெரிய சோலார் பூங்கா