அதிர்ச்சியடைய செய்த சுற்றுச்சூழல் ஆய்வு!

நன்றி குங்குமம் முத்தாரம்

சமீபத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு ஆய்வு நடந்தது. அது விஞ்ஞானிகள் மட்டுமல்ல, பலரையும் அதிர்ச்சியடைய வைத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சில மாதங்களாக சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் அழகான பகுதியான ஆர்க்டிக் பிரதேசத்தை ஆராய்ச்சி செய்து வந்தார்கள். புவி வெப்பமயமாதலாலும், பருவநிலை மாற்றத்தாலும் அங்கு ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பனிக்கட்டி உடைந்து கடலில் கலப்பது, பனிப்பொழிவு போன்றவை அவர்கள் ஆராய்ந்து வந்த முக்கிய கருப்பொருள்கள்.

அப்படி ஆய்வு செய்யும்போது பனிப்பொழிவில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. அப்படியென்றால் ஆர்க்டிக் பகுதியில் வசிப்பவர்கள் சுவாசிப்பது  காற்றல்ல; நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள். இதுதான் அந்த விஞ்ஞானிகளை கவலையளிக்க வைத்துள்ளது. பனிப்பொழிவில் பிளாஸ்டிக் துகள்கள்  எங்கிருந்து எப்படி கலக்கின்றன என்பதை அறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : Environmental Survey,Arctic,Plastic
× RELATED பிளாஸ்டிக் மறுசுழற்சியின் பயன்கள்