உப்புக் குகை!

நன்றி குங்குமம்

இஸ்ரேலின் மிகப்பெரிய மலை சோடம். ஒரு செடியைப் போல வளர்ந்துகொண்டே இருப்பது இதன் சிறப்பு. வருடத்துக்கு 3.5 மில்லி மீட்டர் உயரம் வளர்வதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். Dead Sea-யின் தென்மேற்குக் கரையில் வீற்றிருக்கும் இந்த மலையின் அடிவாரத்தில் உலகின் மிக நீண்ட உப்புக் குகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன் நீளம் சுமார் 10 கிலோ மீட்டர். குகை முழுவதும் உப்பு படர்ந்து வெளிர் நிறத்தில் காட்சியளிக்கிறது. குறிப்பாக குகையின் மேற்புறச்சுவர்களில் அலங்கார விளக்குகளைப் போல தொங்கிக்கொண்டிருக்கும் உப்பைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். எண்பதுக்கும் மேற்பட்ட குகை ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து பத்து நாட்களில் இந்த குகையின் நீளத்தை அளந்துள்ளனர். இதற்கு முன் ‘உலகின் மிக நீண்ட உப்புக் குகை’ என்ற பெருமையை ஈரானில் உள்ள ஒரு உப்புக் குகை தன்வசம் வைத்திருந்தது.


Tags : Salt Cave,Israel
× RELATED உப்பு குறித்து கேட்டால் பருப்பு பற்றி...