மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளை நிறமிப் பல்லியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

உலகிலேயே மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளை நிறமிப் பல்லியை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் நேர்ந்த மரபணுவியல் துறை விஞ்ஞானிகள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.CRISPR என அழைக்கப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரீபியன் தீவுகளில் காணப்படும் குறிப்பிட்ட வகை பல்லியின் முட்டையின் மேல் படிந்திருக்கும் சவ்வுகளைத் தனியாக பிரித்தனர்.

பின்னர் அதில் உள்ள டிஎன்ஏ மூலம் புதிய உயிரினத்தை உருவாக்க சோதனைகள் நடந்து வந்தன. இந்தச் சோதனைகளின் விளைவாக அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமி கொண்ட புதிய பல்லி வகை உருவாக்கப்பட்டது.இந்தப் பல்லியினங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், இதன் மூலம் மனித குலத்தில் மாற்றங்கள் வருமா என்பதை கணிக்கமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.Tags : Gene, white pigment, lizard, scientists, record
× RELATED வரும் 24, 25ம் தேதிகளில் 2 நாள் பயணம் முதல்...