×

பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் ராட்சத எரிமலை

பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பெரிய ராட்சத எரிமலையின் அளவு, அமெரிக்காவின் மன்ஹாட்டன், வாஷிங்டன் நகரங்களுடனும் 20 ஆயிரம் கால்பந்து மைதானங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.டோங்காவின் வாவா தீவுகளிலிருந்து தென் பசிபிக் பெருங்கடல் வழியாக பிஜி சென்று கொண்டிருந்த பயணிகள் மைக்கேல் மற்றும் லாரிசா, நடுகடலில் சிறிய பளிங்கு போலவும் கூடைப்பந்து போலவும் பாறைகள் மிதப்பதை பார்த்துள்ளனர். பல மைல் தூரத்துக்கு பரவியிருந்த அவற்றில் சிலவற்றை சேகரித்து, படம்பிடித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கடலில் உள்ள எரிமலை வெடிக்கும்போது வெளியாகும் வாயுகள் நிறைந்த சூடான லாவா, கடல்நீரால் குளிர்விக்கப்பட்டு பியூமிஸை உருவாக்குகிறது. இந்த பியூமிஸ் படலம் பசிபிக் கடலில் பல மைல் தூரத்துக்கு பரவிக்கிடப்பதாக கடல் பயணிகள் மைக்கேல் மற்றும் லாரிசா கூறுகின்றனர்.

மேலும் அதன் பரப்பளவை மன்ஹாட்டன், வாஷிங்டன், 20 ஆயிரம் கால்பந்து மைதானங்களின் பரப்பளவுடனும் ஒப்பிட்டுள்ளனர். அவர்கள் கொண்டுவந்த பியூமிஸ் துகள்களை ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர்களின் அனுபவத்தை கேட்டறிந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியும் செய்து வருகின்றனர். இந்த பியூமிஸ் படலம் ஆஸ்திரேலியா நோக்கி நகருவதாக குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புவியியலாளரும் இணை பேராசிரியருமான ஸ்காட் பிரையன் தெரிவித்துள்ளார். இவர் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை குறித்தும் பியூமிஸ் குறித்தும் 20 ஆண்டுகளாக படித்து வருகிறார்.கடல் உயிரினங்கள் பியூமிஸ் படலம் மீது அமர்ந்து நாடு விட்டு நாடு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கடற்கரையிலிருந்து ஆயிரத்து 400 மைல் தூரத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை புவி வெப்பமயமாதலால் சிதைவடைந்து வருகிறது. இவற்றை செறிவூட்டி ஆரோக்கியமானதாக்க பியூமிஸ் துகள்களால் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா செயற்கைக்கோளும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்த பியூமிஸ் படலத்தை கண்டறிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.Tags : Giant Volcano, Pacific, Ocean
× RELATED தெற்கு பசிபிக் கடலில் உள்ள வானாட்டு தீவில் அதிகாலையில் பலத்த நிலநடுக்கம்