வருசநாடு பகுதியில் ஒரு சங்கு கழுதைப்பால் 100 ரூபாய்க்கு விற்பனை

வருசநாடு:  வருசநாட்டில் கழுதைப்பால் ஒரு சங்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருசநாடு அருகே தும்மக்குண்டு வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம், வீரசின்னம்மாள்புரம், வண்டியூர் காமராஜபுரம், முருக்கோடை போன்ற பகுதிகளில் கழுதைப்பால் விற்பனை அமோகமாய் நடந்து வருகிறது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கழுதை பாலை வாங்கி குடிக்கின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கழுதை பால் சங்கு அளவிற்கு  50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை விற்கிறது.  இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் கழுதைப்பால் விற்பனை நடைபெற்று வருகிறது. பெரம்பலூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்து  பலர் கழுதைப்பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினர்.Tags : For sale ,100 rupees wit, donkey , Varusanad
× RELATED கரூர் தென்னிலை அருகே கடையில் 200 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபர் கைது