×

தொடர்ந்து மாயமாகும் பெண்கள்: கண்டுபிடிப்பதில் போலீசார் திணறல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பகுதியில் பெண்கள் தொடர்ந்து மாயமாகி வருவதால் கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி கல்லூரி பெண்கள் மாயமாவதும், பள்ளிக்கூட மாணவிகள் மாயமாவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. மாதத்திற்கு இரண்டு வழக்குகள் என்று மயிலாடுதுறை சுற்றுவட்டார காவல் நிலையங்களில் பதிவாகி வருகிறது. போலீசாருக்கும் வழக்குப் பதிந்து... பதிந்து... போதும் போதும் என்றாகிவிட்டது. மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோவில் ராமன்கோட்டகம் காலனிப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் செந்தில்(33).

இவருக்கு திருமணமாகி ரம்யா(29) என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளான பிந்து(3) பிரீத்தி(1) ஆகியோர் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி அன்று மதியம் தன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவருகிறேன் என்று கூறிவிட்டு ரம்யா தன்குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார், ஆனால் உறவினர் வீட்டிற்கும் செல்லவில்லை, வீட்டிற்கும் திரும்பவில்லை, செந்தில் பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுகுறித்து செந்தில் அளித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : following ,illusion ,women,cops ,discovery
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...