×

இந்தியா - பாக். உறவில் பிரச்சனை ஏற்பட்டாலும் கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடரும் : பாகிஸ்தான் அரசு விளக்கம்

இஸ்லாமபாத் : காஷ்மீர் விவகாரத்தால் கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அந்நாடு மறுத்துள்ளது. இஸ்லாமபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் ஆஷிக் அவான், திட்டமிட்டபடி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கர்தார்பூர் வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும் என்றார். இரு நாடுகளுக்கான உறவில் பிரச்சனை ஏற்பட்டாலும் கர்தார்பூர் வரும் சீக்கியர்களுக்கு பாகிஸ்தானின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று கூறினார்.

பிரிவினைவாதம் மற்றும் சகிப்புத்தன்மை இன்மை அதிகரித்து வரும் நிலையில், கர்தார்பூர் வழித்தடம் மரியாதை மற்றும் பொறுமை ஆகியவற்றை பரப்புவதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் சீக்கிய மத குரு குரு நானக் தேவின் நினைவிடம் உள்ளது. இங்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே போல பாகிஸ்தானில் இருந்து கர்தார்பூர் வரையிலான வழித்தடத்தை அமைக்க  சம்மதித்த பாகிஸ்தான், அந்த பணிகளை தொடர்ந்து வருகிறது.


Tags : Kashmir, Pakistan, Route, Gardarpur, Central Government, Gardarpur
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...